Wednesday, 27 June, 2007

பல்லடம் நாத்திகர் விழா


கோவை மாவட்டம் பல்லடத்தில் 15.04.2007 அன்று நாத்திகர்விழா எழுச்யுடன் நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் பி.எம்.ஆர் திருமண மண்டபத்ல் தோழர் ப.மூர்த்தி நினைவு அரங்கில் பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சி.விஜயன் வரவேற்புரை நிகழ்த்தபல்லடம் திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப்பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.
முதல் நிகழ்வாக தஞ்சை குப்பு வீரமணி அவர்கள் தலைமையில் கா.சு.நாகராசு, சிற்பி செல்வராசு, பன்னீர்செல்வம், பெங்களூர் கலைச்செல்வி, பேராசிரியர் ருக்மணி, மதிமாறன், சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து புலவர் செந்தலை கவுதமன் நடுவராகவும் கடலூர் வழக்கறிஞர் அழகரசன், மயிலாடுதுறை அழகிரி ஆகியோர் வழக்காடுபவர்களாகவும் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது.
மாலை 5.00 மணியளவில் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கி காமராசர் திடலில் முடிவடைந்தது.
மாலை 7.00 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கழக தலைமைக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் தலைமை வகித்தார். பல்லடம் திருமூர்த்தி வரnற்புரை ஆற்றினார். விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் வந்தியத் தேவன், ஆதித்தமிழர்பேரவை பொதுச்செயலாளர் நீலவேந்தன், வழக்கறிஞர் செ. துரைசாமி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டினன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர். சூலூர் பன்னீர்செல்வம் நன்றியரையாற்றினார்.
விழாவிற்கு உழைத்த தோழர்கள்:
க.ஆறுமுகம், ந.ரமேசு, சிவக்குமார், இரா,அண்ணாத்துரை, ம.கருப்புச்சாமி, சி.முருகேசு, மு.வடிவேல்,சு.வடிவேல்,ந.சின்னச்சாமி, ம. இரவி, இராஜ்கபூர், திருமூர்த்தி, குளத்துப்பாளையம் குமார், குணசேகர், பொங்கலூர் கார்த்தி, சிவராசு, செகதீசன், இராமசாமி,கிருட்டினமூர்த்தி, இஸ்மத்,குட்டி. பழனிச்சாமி,ஆ.பொன்னுச்சாமி


1 comment:

இரா.முருகப்பன் said...

தோழர் அவர்களுக்கு வணக்கம்.

இன்றுதான் இந்த வலைப்பக்கத்தை பார்த்தேன்.

தங்கள் உழைப்பு பெருமைக்கும்,பாராட்டுக்கும் உரியது.

இன்றைய ஊடகங்களுக்கு நம்முடைய செய்திகள் முக்கியம் இல்லாமல்போகின்றது. அப்படியே வெளியிட்டாலும், மாவட்ட அளவில் மட்டுமே தினசரிகள் வெளியிடுகிறது.

இந்தக் குறையை போக்கவும்,
நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற வரலாற்று பதிவுமாக அமைந்துள்ளது.

மீண்டும் பேசுவோம்.

முருகப்பன், திண்டிவனம்.