Sunday, 17 June 2007

2003 சனவரி முதல் 2005 டிசம்பர் வரை கழகத்தின் செயல்பாடுகள்


சன.6 பவானி ஆற்றின் குறுக்கே-கட்டப்பாடி முக்காலி என்ற இடத்தில்-கேரள அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து-பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் கழகம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியது. கட்சி வேறுபாடின்றி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

சன.6 தலித் மக்களை இழிவுபடுத்திப் பேசிய காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்து-சென்னையில் வள்ளலார் பேரவையின் சார்பில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. கழகம் முன் முயற்சி எடுத்து நடத்திய இந்தக் கூட்டத்தில்-சங்கராச்சாரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சன.8 சீர்காழியில் கழக சார்பில்-மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.
சன.16 விழுப்புரம் மாவட்டம் தொழுவந்தாங்கலில்-கழகத்தின் ஒரு நாள் பயிற்சிப் பாசறை நடந்தது.
சன.21 பவானி நதி குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து-கோபியில் கழகம் மனிதச் சங்கிலி நடத்தியது.
சன.23 கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி-கருநாடக சிறையிலிருந்து-அம்மா பேட்டை வெடிகுண்டு வழக்கு விசாரணைக்காக திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.


பிப்.12, 13,14 திருச்சியில் கழகத் தோழர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாமை-கழகமும், சமூகக் கல்வி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து நடத்தின.
பிப்.16 வேலூர் மாவட்டக் கழகம் சார்பில் வேலூரில் மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடந்தது.
பிப்.20 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்டு, இந்தியில் எழுதப்பட்டதைக் கண்டித்து, பொள்ளாச்சியில் தார் பூசி அழிக்கும்போராட்டத்தை
பிப்.20-ல் நடத்துவதாகக் கழகம் அறிவித்தது.
பிப்.27 மைக்கல்லில் இந்தி நுழைக்கப்பட்டதை எதிர்த்து-கழகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. தி.மு.க.உறுப்பினர்கள், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கழகம் போராட்டம் நடத்துவதற்கான அவசியம் இல்லாமலே, இந்தி எழுத்துக்களை நெடுஞ்சாலைத் துறையே அழித்து விட்டு மீண்டும் தமிழில் எழுதியது கழகத்தின் கோரிக்கை வெற்றியடைந்தது.


மார்ச்.16 மேட்டூரில்-கழக சார்பில் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடும்-பேரணியும் எழுச்சியுடன் நடந்தது.தமிழ்நாட்டில் வளரத் துடிக்கும் பார்ப்பன மதவெறி சக்திகளுக்கு எதிராக
மார்ச் 16 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை ‘வீழ்த்துவோம், வர்ணாஸ்ரமத்தை’ எனும் தலைப்பில் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கங்களை கழகம் நடத்தியது.
மார்ச்.28 அடுக்கடுக்காக-கருநாடக அரசு தொடர்ந்த பொய் வழக்குகளின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, ஓராண்டு 20 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 28-ம் தேதி பிணையில் விடுதலையானார். பகல் ஒரு மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, இரவு 11 மணியளவில் சொந்தக் கிராமமான உக்கம்பருத்திக்காடு வந்து சர்ந்தார். சேலத்திலிருந்து சொந்த ஊர் வந்து சேரும் வரை-மக்கள் வழிநெடுக எழுச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.

ஏப்.10 சேலத்தில் நட்சத்திர ஒட்டலில் தங்கிக்கொண்டு, தனது தியான சக்தியால் மழை பெய்விக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார் ஒரு சாமியார். பக்தர்களிடம் ஏராளமாகப் பணம் பறித்து வந்தார். சாமியார் அறிவித்த காலக் கெடுவுக்குள் மழை பெய்யாததைத் தொடர்ந்து, அடுத்து ஒரு மணி நேரத்திலேயே சாமியார் மோசடிகளை விளக்கி, கழகத் தோழர்கள், அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு எதிரே கூடி, மக்களிடம் துண்டறிக்கைகளை வினியோகித்தனர். பொதுமக்கள் தௌ¤வு பெற்று சாமியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். நடுங்கிப் போன சாமியார், காவல்துறையின் பாதுகாப்புடன், ஓட்டலிலிருந்து ரகசியமாக ஒட்டம் பிடித்தார். கழகத்தின் நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.
ஏப்.10 சென்னையில் ராணி மோ¤க் கல்லூரியை இடித்து விட்டு, தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை எதிர்த்து-பொதுச் செயலாளா¢ விடுதலை ராசேந்திரன், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏப்.12 கழகத் தலைவர் பிணையில் விடுதலையானதைத் தொடர்ந்து-மேட்டூரில் அவசரமாகக் கூடியது. கழகத்தில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் தர்வு செய்யப்பட்டனர். கொடி ஏற்று விழாக்களையும், பயிற்சி முகாம்களையும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஏப்.12 ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம் கூண்டோடு கலைக்கப்பட்டு, அனைவரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் சர்ந்தனர்.
ஏப்.14 ஏப்ரல் 14 முதல் ஜுன் 2-ம் தேதி வரை சேலம் நகரைச் சுற்றி 50 தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்தன. பெரியார் பித்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை நடத்தினர்.
ஏப்.24 ராஜுவ் கொலை வழக்கில் ‘தடா’ நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்ததை எதிர்த்து-சுவரொட்டி ஒட்டியதாக-1998-ல் கழகத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கில் நான்கு ஆண்டு விசாரணைக்குப் பிறகு கேசவன். செல்வராஜ், ரமேஷ் மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.


மே.2 ‘பொடா’ சட்டத்தை எதிர்த்து-ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தோழர் நாகேசுவரன் தலைமையில் மாவட்டக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மே.3 ஏப்ரல் 14 முதல் ஜூன் 2-ம் தேதி வரை சேலம் நகரைச் சுற்றி பொ¤யார் பித்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் 50 தொடர் கூட்டங்களாக நடந்தன.மே.3 பொள்ளாச்சியில்-கழக சார்பில், பயங்கரவாத-பிரிவினை எதிர்ப்பு மாநாடு-கழக சார்பில் எழுச்சியுடன் நடந்தது.
மே.14 திண்டுக்கல் திராவிடர் கழகத் தோழர் பழ.இராசேந்திரன் மீது சிவசேனைகாலிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து-கழகம். அனைத்துக் கட்சியினரைக் கூட்டி கண்டனக் கூட்டம் நடத்தியது.
மே.16 மே.16, 17 தேதிகளில் கொளத்தூரிலும், 18,19 தேதிகளில் திருப்பூரிலும், 23,24 தேதிகளில் மதுரையிலும், 25,26 தேதிகளில் திண்டுக்கல்லிலும், மே 31, ஜுன் 1 தேதிகளில் ஓசூரிலும், ஜுன் 7,8 தேதிகளில் சென்னையிலும் ஜுன் 29-ல் சத்திய மங்கலத்திலும் கழகப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
மே.30 தி.க.வினர் மிரட்டலை முறியடித்து-பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்டக் கழக அமைப்பு உருவாக்கப்பட்டது.


ஜுன் 14 கழகத்தினரை நரில் சந்திக்கவும்-குடும்ப விழாக்களில் பங்கேற்கவும்-ஜுன் 14 முதல்
ஜுன் 8 வரை-கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பயணமானார். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, இராமேசுவரம், மதுரை மாவட்டங்களில் இந்நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தன. ஜு
ன் 15 சென்னையில்-கழக ஆட்சிக்குழுவின் முதல் கூட்டம், அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில் கூடி-மாநாடு பற்றி ஆலோசித்தது. கழக சார்பில் ‘தமிழர் தன்மான மீட்பு’ மாநாட்டை புதுவையில் ஜுலை 19-ல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


ஜுலை 7 ஜுலை 7-ல் பட்டுக்கோட்டைப் பகுதிகளில காலை முதல் மாலை வரை-தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களும்- மாலையில் பட்டுக்கோட்டையில் கழகப் பொதுக் கூட்டமு எழுச்சியுடன் நடந்தது. கழகத் தலைவர், பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தி.க.வினர் போலீஸில் பொய்ப் புகார் தந்து, கழகத்தின் நடவடிக்கைகளை நிறுத்து முயன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
ஜுலை 17 புதுவையில் கழக மாநில மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடப்பதைக் கண்டு அஞ்சிய சங்பரிவாரங்களும்-அ.இ.மு.க.வும் கழக மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டன. இதை எதிர்த்து, காங்கிரஸ், சி.பி.அய், சி.பி.அய்.(எம்) கட்சிகள், கழகத்துக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டன.ஜுலை 19 புதுவையில் கழக மாநில மாநாடு-புதுவை கழகத் தோழா¢களின் கடும் உழைப்பால் எழுச்சியுடன் நடந்தது. தனியார் துறை இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் ‘சம்பூகன் சமூகநீதிப் பயணம்’ பிரச்சாரத் திட்டத்தையும்-கருவறை நுழைவுப் போராட்ட அறிவிப்பையும் - கழக சார்பில், கழகத்தலைவர் அறிவித்தார்.
ஆக்.1 குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்தி விட்டு, கோவை வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக-பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் கழகம் கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் .


ஆக.10 மாநில மாநாட்டு வரவு செலவு கணக்குகளைப் பெறுவதற்காக-களப்பணி ஒருங்கிணைப்பாளர்கள் அக்.10 முதல்-15 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தனர்.
செப்4 ரசாயனப் பெருட்களால் தயாரிக்கப்பட்ட வினாயகன் சிலைகளை, கடலில் கரைப்பதால் சுற்றுச் சூழல் கெடும் என்பதால், சிலை கரைப்புக்குத் தடை கோரி, கழக வழக்கறிஞர் இளங்கோ, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


செப்.13 செப்டம்பர் 13,14 தேதிகளில் தர்மபுரியில் - மாவட்டக் கழகத் தோழர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
செப்.17 மதவெறி பிடித்து புதுவை ஆளுநரைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி-புதுவை கழகத் தோழர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். புதுவையில் ஆர்.எஸ்.எஸ்.காரராக செயல்பட்டு வந்த ஆளுநர் மல்கானியை எதிர்த்து-முதல் கண்டனத்தைச் கழகம் எழுப்பியது.
செப்.20 ‘சம்பூகன் நீதிப் பயணம்’- செப்பம்பர் 20-ல் தூத்துக்குடியில் துவங்கி-அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.
செப்.26 மாணவர்கள் எடுத்த புகைப்படம் ஒன்றில் பேய் இருப்பதாக-கிளப்பி விடப்பட்ட புரளியை எதிர்த்து-பெரம்பலூர் மாவட்டக் கழகத் தோழர்கள், பெரம்பலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில்-மக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.


அக்.2 சென்னையில் நிறைவடைந்த சம்பூகன் சமூகநீதிப் பயணத்தை வாழ்த்தி, அனைத்து கட்சித் தலைவர் உரையாற்றினார்கள்.


நவ.3 தமிழகம் முழுதும்-அய்.சி.அய்.சி.அய். தனியார் வங்கியின் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக-கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வங்கியின் பார்ப்பன தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் துண்டறிக்கைகள் வினியோகிக்கப்பட்டன.
நவ.24 கருவறையில் இனமொழித் தீண்டாமைக்கு எதிராக - சேலத்தில் மாவட்டக் கழக சார்பில் மாபெரும் மாநாடு நடந்தது. கழகுத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழக்கப்பட்டது. 1925-ம் ஆண்டில் ‘குடி அரசில்’ வெளியான பெரியார் எழுத்துக்களும்-பேச்சுக்களும் தொகுக்கப்பட்டு. முதல் தொகுதி வெளியிடப்பட்டது. தலைமைக் கழக நிதியாக ரூ.2 லட்சத்தை சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் வழங்கினர்.
நவ.24 Êனவா¤ 30-ம் தேதி காஞ்சி காமாட்சிக் கோயிலுக்குள் கருவறை நுழைவுப் போராட்ட விளக்கக் கூட்டங்கள்-தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.


டிச.12 பழனி நகரத்தில்-தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு சிறப்புடன் நடந்தது.
டிச.14 டிசம்பர் 14,15,16 தேதிகளில் திருச்சியில் கழகமும், சமூகக் கல்வி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து நடத்திய, பயிற்சி வகுப்புகள் நடந்தன.
டிச.29 கழக வளர்ச்சிக்காக-சென்னையில் ‘கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தை சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

2004 கழகம் கடந்த வந்த பாதை
(2004 ஆம் ஆண்டில் - கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு)

ஜன.6 கோயில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சிற்காக காஞ்சி சூர்யா ஒட்டலில்- பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்- கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. போராட்ட செயற்குழு அமைக்கப்பட்டது.ஜன.24 கருவறை நுழைவுப் போராட்ட விளக்கக் கூட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து - மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற்றார். வழக்கறிஞர் துரைசாமி வாதாடினார். காலல் துறைத் தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடா¢ந்து பணப்பாக்கம், நெமிலியில், போராட்ட விளக்கக் கூட்டங்கள் நடந்தன. போராட்டம் பற்றி சன் தொலைக்காட்சியில் நேருக்கு நர் நிகழ்ச்சியில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி அளித்தார்.
சேலத்தில் 50 தொடர் கூட்டங்கள் சேலத்தில் 2004 ஆம் ஆண்டு ஏப்.14 இல் துவங்கி- 2004 ஜன.3ஆம் தேதி வரை 43 தொடர் கூட்டங்களை கழகம் நடத்தி - பிரச்சாரக்களத்தில் புதிய சாதனை படைத்தது. சேலம் கழகச் செயல்வீரர் விசு முயற்சி எடுத்து, தோழர்களின் ஒத்துழைப்போடு நடத்திய இந்தக் கூட்டங்களில், கழகத்தலைவர் கொளத்தூர் மணி, பேட்டி அளித்தார்.
ஜன.30 காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கருவறை -நுழைவுப் போராட்டம்- கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொ¤யார் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்த இந்தக் கிளர்ச்சியை, பெரியார் மறைந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியது. தமிழகம் முழுதுமிருந்தும் 860 தோழர்கள் கைதானார்கள்.


பிப்.14 திண்டுக்கல், கோவை, மயிலாடுதுறை, புதுவை உட்பட பல ஊர்களில் கழக சார்பில் ‘காதலர் தினம்’ சாதி மறுப்பு நாளாக கொண்டாடப்பட்டது. கோவையில் சாதி மறுப்பு சுயம்வரம் நடத்தப்பட்டது.
பிப்.20 தொலைபேசித் துறை- தொலை பேசி வழியாக, சங்கராச்சாரி ‘அருள்வாக்க’ப் பிரச்சாரம் செய்யும் திட்டத்தைத் கண்டித்து, சென்னையில் ஆனூர் செகதீசன் தலைமையில் தொலைபேசியை உடைத்து, கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்டம் வெற்றி பெற்றது. ‘அருங்வாக்கு’ நிறுத்தப்பட்டது.
பிப்.27 சென்னை திருவல்லிக்கேணி- இராயப்பேட்டையில் தாழ்த்தப்பட்டோர் பகுதிகளுக்கு, வருகை புரிந்த, காஞ்சி ஜெயேந்திரனை எதிர்த்து, கழக சார்பில், அதே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைந்த கொள்ளை மறவர் பத்ரிநாரயணன், ஒரே நாள் இடைவெளியில், தோழர்களைத் திரட்டி, இந்த கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.


மார்ச் 13 ‘பொடா’ அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் பொது விசாரணை புது டில்லியில் நடந்தது. இந்த விசாரணையை நடத்திய 16 அமைப்புகளில் தந்தை பெரியார் திராவிடர் கழகமும் அடங்கும். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இதில் கழக சார்பில் கலந்து கொண்டார்.
மார்ச் 28 தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில கலந்துலையாடல் கூட்டம் - ஈரோடு நகா¤ல் கூடியது. நாடாளுமன்றத் தர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.


ஏப் 13 புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் நடந்த விழாவில் விசுவ இந்து பரிஷத் - ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்றதை எதிர்த்து - புதுவைக் கழக சார்பில் லோகு. அய்யப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தி 110 கழகத் தோழர்கள் கைதானார்கள்.
ஏப் 18 பழனி முருகன் கோயிலில் போட்டி முருகன் சிலையை நிறுவிய காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரரின் பார்ப்பனிய தலையீட்டைக் கண்டித்து- பழனியில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலையிலும், கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஏப்.25 பா.ஜ.க. , அ.இ. அ.தி.மு.க ஆட்சிகளின் இந்துத்துவ பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் “தமிழர்களே-எச்சரிக்கை” என்ற தர்தல் பிரச்சாரக்கையேடு புதுவை கழகத்தால் வெளியிடப்பட்டது. யூமிழ்நாடு மற்றும் புதுவையில் பல்லாயிரக்கணக்கில் இந்த நூல் ரூ.5 விலையில் விற்கப்பட்டது. தோ¢தல் களத்தில் நல்ல பிரச்சாரக் கருவியாக இந்த நூல்
ஏப்24 சூகாவை, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில்-தனியாக மேடை அமைத்து, தி.மு.க. வட்டணிக்கு ஆதரவாக, கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.
ஏப்.30 துரோகக் கும்பலின் கொலை வெறிக்கு-சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாகச் செயல்பட்டசெயல் வீரர் பத்ரிநாராயணன் பலியானார்.


மே16 கழகத்தின் துடிப்பு மிக்க செயல் விரோதக் கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டார்
மே 17 ஆம் தேதி முதல்-ஜீலை 26ம் தேதி வரை, தமிழகம் முழுவதும், கழகத் தோழர்களை சந்திக்கும்ப யணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவக்கினார். கழக ஏட்டுக்கு சந்தா சோ¢ப்பது கழக அமைப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆங்காங்கே-கழகப் பொதுச் செயலாளர்கள் கோவை இராம கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மே26 கோவை மாவட்டம் காளப்பட்டியில் அருந்ததி சமூகத்தினர் மீது, சாதி வெறியர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில், கழகத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள்.
மே 29 சேலத்தில் பார்பபன குட்டிச் சாமியார் ஒருவனை வைத்து, மக்களை மடமையில் ஆழ்த்தும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்திய, பாஜ.க. சங்பரிவாரங்களுக்கு எதிராக கழகம் களத்தில் இறங்கியது. குட்டி சாமியார் மோசடிகளை விளக்கும் துடறிக்கைகள், பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.


ஜுலை 9 மேட்டூர் அலுமினிய தொழிற்சாலையான மால்கோவில்-உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து, கழக சார்பில் ஆப்பாட்டம் நடந்தது. Ñ£வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நிர்வாகத்தின் தூண்டுதலால் நள்ளிரவில் வீடுகளில் கைது செய்யப்பட்டனர். 500 மால்கோ தொழிலாளர்கள், உள்ளூர் மக்களின் உ£¤மைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். நிர்வாகம்-கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவா¢களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த இறங்கி வந்தது.ஜுலை 11 திருப்பூரில் கழக ஆதரவாளர் தோழர் துரைசாமி-தனது சொந்த இடத்தில், சொந்த செலவில் பொ¤யார் படிப்பகத்தைக் கட்டித் தத்நார். ணூழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலையில் திறப்பு விழா நடந்தது.
ஜுலை24 குடந்தைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 90 குழதைகள் தீயில் கருகி மாண்டன்£. ணூல்வியை வியாபாரமாக்கியதால், எந்தப் பாதுகாப்பு அடிப்படை வசதியுமின்றி, பள்ளிகள் நடப்பதால் நடக்கும் இத்தீவிபத்துக்கு கண்டனம் தரிவிக்கும் வகையில்-“கல்வியை வணிகமயமாகக்காதே” என்ற கோரிக்கையை முன் வைத்து, தமிழகம் முழுதும் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஆக.5 கொளத்தூரில் இரு குடும்பங்களுக்கிடையிலான ஒரு பிரச்சனையில் அவா¢களின் வேண்டுகோளை எற்று , சமரசம் பேசச் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக கொலை முயற்சி பொய் வழக்குத் தொடர்ந்து, காவல்துறை கொளத்தூர் மணியை கைது செய்தது. தோழர்கள் கந்தன், மார்ட்டின், முல்லை வேந்தன், சுரேஷ், அருட்செல்வன், அருள், பழனிச்சாமி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குகள் போடப்பட்டன. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுத்து ‘மால்கோ’ நிறுவனமும், மேட்டூர் பகுதியில் விஷவாயுக் கசிவுகளை ஏற்படுத்தி வந்த ‘கெம்பிளாஸ்ட்’ நிறுவனமும் -இவைகளைத் தட்டிக் கேட்டு வந்த கழகத்தைப் பழிவாங்கும் நோக்கத்தோடு, காவல்துறையை தூண்டிவிட்டு, இந்தக் கைதை நடத்தியது. தோழா¢கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆக.19 மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து - சீர்காழியில் வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்ட இராம.கோபாலனுக்கு எதிராக- சீர்காழீ கழகத் தோழர்கள் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் வழியாக, எதிர்ப்பு இயக்கம் நடத்தினர். இராம.கோபாலன், தனது, பிரச்சாரத்தையே ரத்து செய்தார். (சீர்காழி - இராமகோபாலனின் சொந்த ஊராகும்)
ஆக.28 கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் கைதைக் கண்டித்து - மேட்டூரில் மனித உரிமை அமைப்புகள், அனைத்துக் கட்சியினர் பங்கேற்றக் கண்டனக் கூட்டம் நடந்தது. பினையில் வெளிவந்த கழகத் தலைவரும், பங்கேற்று, கைதுக்குப் பின்னணியில் நடந்த சதித்திட்டங்களை அம்பலப்படுத்தி, காவல்துறைக்கும், தொழில் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.


செப். 8 ‘வெஸ்ட் கோஸ்ட்’ விரைவு இரயில் - கோவை, திருப்பூர் நகரங்களில் நிற்காது என்று, இரயில்வே துறை அறிவித்ததை எதிர்த்து, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில், கோவை மாவட்டக் கழகம், கோவை மற்றும் திருப்பூரில் தொடர் மறியலில் இறங்கியது. தோழர்கள் தொடர்ந்து கைதானார்கள். இறுதியில் கழகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றது.
செப்.9 சேலம் அரசு கல்லூரி ஆண்டு மலரில் பெரியாரை இழிவுபடுத்தும் கட்டுரை வெறி வந்ததை எதிர்த்து - கழகத் தலைவர் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதினார். உடனே மலர் வெளியீட்டுக்கு குழுவினர், கழகத்தலைவரை நரில் சந்தித்து, வருத்தம் தரிவித்ததோடு, மலரை விநியோகம் செய்யாமல் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.செப். 16 காஞ்சி காமாட்சி கோயில் நிர்வாகி சங்கரராமன் - கோயிலுக்குள் படுகொலை செய்யப்பட்டார். இதில் ஜெயேந்திரருக்கு தொடர்பு உண்டு என்று ‘நக்கீரன்’ வார ஏடு அம்பலப் படுத்தியவுடன், நக்கீரன் ஏடு வெளியிட்ட செய்திகளைத் துண்டுப்பிரசுரமாகவும், சுவரொட்டிகளாகவும் அச்சிட்டு, தமிழகம் முழுவதும், கழகம் சங்கராச்சாரி மீது நடவடிக்கைக் கோரி, எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியது.
செப்.17 சென்னையில் இந்து முன்னனி நடத்தும் வினாயகன் சிலை ஊர்வலங்களில் ரசாயனத்தால் செய்யப்படும் விநாயகன் சிலைகளைக் கடலில் கலைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை எடுத்துக்காட்டி, உயர்நீதி மன்றத்தில் கழக வழக்கறிஞர் இளங்கோ, வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர் துரைச்சாமி வாதித்தார். உயர்நீதிமன்றம், இரசாயன சிலைகளைக் கரைக்க தடைவிதித்தது.
செப். 26 ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் - கழக சார்பில் தமிழர் உரிமை முழக்க மாநாடும் பேரணியும் எழுச்சியுடன் நடந்தது. மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.


அக்.15 தாராபுரம் மாநாட்டுத் தீர்மானத்தின்படி - தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அக் 15,16,17 தேதிகளில் கழக சார்பில், பல்வேறு ஊர்களில் சைக்கிள் பல்வேறு ஊர்களில் சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டன.

நவ.11 சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி ஜெயேந்திரரைத் தமிழ்க அரசு கைது செய்தது. கழகம் தொடர்ந்து நடத்தி வந்த இயக்கம் வெற்றி பெற்றது. சங்கராச்சாரி எதிர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வரும் அமைப்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தான் என்று ‘தீம்தரிகிட’ ‘நாகதிகம்’ பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
நவ.14 கோவையில் கழக ஆட்சிக்குழு கூடி இரண்டாவது கட்ட சம்பூகன் சமூக நீதி பயண்த்துக்கான திட்டங்களைத் தீட்டியது. ஆனூர் செகதீசன் கழகத் துணைத் தலைவரானார்.
நவ.18 காஞ்சி மடத்துக்கு - அறநிலையத்துறை சட்டங்களிலிருந்து தரப்பட்டுள்ள விதிலிக்கை ரத்து செய்யக் கோரி - தமிழகம் முழுதும் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.


டிச.5 செயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரியும், குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் - காஞ்சிபுரத்தில் - கழக மகளிர் அமைப்பு சென்னை கவிதா தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது. 85 ஆண்கள் உட்பட 210 பர் கைதானார்கள்.


கடந்த ஆண்டில் கழகம் வெளியிட்ட 12 நூல்கள்கடந்த ஆண்டு - கழக சார்பில் - பல புதிய வெளியீடுகள் வெளியிடப்பட்டன. கடவுளர் கதைகள், இந்துமத பண்டிகைகள், பெரியார் வாழ்க்கை நெறி, இளைஞர்களே உங்களுக்கு தரியுமா, இனிவரும் உலகம், மனு நீதி, பெரியாரும் அம்பேத்கரும், கடவுள் மறுப்பு தத்துவம், வீரசவர்க்காரின் புதைக்கப்பட்ட உண்மைகள், சங்பரிவாரின் சதி வரலாறு, யார் அன்னியர்கள்? யார் இவர்கள்? தமிழர்களே எச்சரிக்கை ஆகிய 12 நூல்கள், கடந்த ஆண்டு மட்டும் கழகச் சார்பில் வெளியிடப்பட்டன


டிச.23 கோபி நகராட்சிப் பகுதியில் . சட்டவிரோதமாகக் கட்டப்படவிருந்த வினாயகன் கோயிலை, ஈரோடு மாவட்டக் கழகம் தடுத்து நிறுத்தியது.
டிச.26 ‘சுனாமி’ அலைவீச்சுக்கு, பல்லாயிரம் மக்கள் பலியானார்கள். தமிழ் நாட்டில் முன் எப்போதும் நடந்திடாத சோகம்; 10,000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கழகம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் இறங்கி செயல் பட்டது.

2005 கழகம் கடந்து வந்த பாதை


சுமார் 1000 பக்கங்களைத் கொண்ட ‘குடி அரசு’ பெரியார் கட்டுரைகளின் இரண்டு தொகுப்புகள் வெளியீடு; 2 மாநிலம் தழுவிய மாநாடுகள்; போராட்டங்கள்; தொடர் கூட்டங்கள்; பயிற்சி முகாம்கள் என்று தந்தை பொ¤யார் திராவிடர் கழகம் 2005 ஆம் ஆண்டில் தனது களப்பணிகளை ஆண்டின் கழக முக்கிய செயல்பாடுகளின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
ஜன. 25 திண்டுக்கல் பகுதியில் 50 தொடர் கூட்டங்கள் துவங்கின அனைத்துக் கூட்டங்களிலும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பங்கேற்றார். பெரியார் நம்பி ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகள் நடந்தன. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் - சில கூட்டங்களில் பேசினார்.


பிப்.2 நாகை, கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கழகத் தோழர்கள் வழங்கினர்.
பிப்.17 தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் படத்தோடு,மாவீரர் நாள் நினைவு சுவரொட்டி ஒட்டியதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை கழகத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
பிப்20 கோபி அருகே கொளப்பலூரில் ஒரு நாள் கழக பயிற்சி முகாம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் பேசினர்.


மார்ச் 7 சின்னாளப்ப்டடியில் அருந்ததியர் ஒருவரை-சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் செட்டியார் சகப் பெண்,சாதி வெறியர்கள்-ஊரில் இவர்களை ஒதுக்கி வைத்து “தீண்டாமை”யைத் திணித்ததை எதிர்த்து, திண்டுக்கல் கழகத் தோழர்கள் சாதி வெறியர்களுக்கு எதிராக களத்தில் இறங்கினர்
மார்ச்8 பெரம்பலூர் மாவ்ட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோயில் கட்டப்படுவதை எதிர்த்து, கழகம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கோயில் கட்டத் தடை விதித்தது. மாவட்ட அமைப்பாளர் லெட்சுமணன், வழக்கைத் தொடர்ந்தார். வழக்கறிஞர் துரைசாமி வாதாடினார்.


ஏப்.7 தமிழ்நாட்டில் ஏழைச் சிறமிகளை, கேரளாவுக்கு வீட்டுவேலைகளுக்காக விறப்னை செய்து வந்த கொடுமைக்கு எதிராக-பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏப்.9 மதுரையில்-கழக சார்பில், ஏப். 9 அன்று ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடும், பேரணியும் காலையிலிருந்து, இரவு வரை எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகம் முழுதுமிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர்.
ஏப்.18 1997-இல் சென்னையில் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டி ஊர்வலத்தில்-விடுதலைப்புலிகளுக்க ஆதரவாக முழக்கமிட்டதாகக் கூறி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், துணைத்தலைவர் ஆனூர் செசுதீசன் ஆகாயர் மீது காவல்துறை தொடாந்த வழக்கில்-சென்னை பெருநகர்-சைதை கற்றவியல் நீதிமன்ற நீதிபதி இருவரையும் விடுதலை செய்தார்.
ஏப்30 மே-1 மேட்டூர் கெம்பிளாஸ்ட் ரசயான ஆலையால் சுற்றச் சூழலு, விவசாயமும் தொடர்ந்து பாதிக்கப்படுவதை எதிர்த்து போராடி வரும் தந்தை பொ¤யார் திராவிடர் கழகம் இந்திய மனித உரிமை ஆணையத்திடம் புகார் தந்தது. விசாரணைக்காக உறுப்பினர்கள்-மேட்டூருக்கு நேரே வந்து மக்களிடம் விசாரணை நடத்தினார். கழக சார்பில் ஆணையத்திடம் மனு தரப்பட்டது.


மே5 கோவை நகர வளர்ச்சிக்கான ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடுவதைக் கண்டித்து.கழக சார்பில்-பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் தலைமையில்”ஆமை”வடிவப் போராட்டம் நடைபெற்றது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஜுன் 5 ‘தமிழைவிட சமகிருதமே உயா¢ந்தது’என்று இறுமாப்பு பேசிய எபத்தாளர் ஜெயகாந்தன்-கோவை நிகழ்ச்சி ஒன்றில் பேச வந்தபோது-“தமிழல் பேசாதே சமகிருதத்திலேயே பேசு” என்று கழகத் தோழர்கள் தீர்ப்பு முழக்கமிட்டனர். ஜெயகாந்தன் திணறிப் போனார்.
ஜுன்24-25 குத்தூசி குருசாமி,புலவர் குழந்தை நூற்றாண்டு விழாக்கள் கழக சார்பில் சென்னையில் இரு நாட்கள் நடத்தப்பட்டன.


ஜுலை4 நுழைவுத் தர்வை ரத்து செய்த தமிழக அரசின் சமூகநீதி ஆணையை-உயர்நீதிமன்றதலையிட்டு தடுத்துவிட்டது. நீதிமன்றத்தைக் கண்டித்தும், சட்டசபையைக் கூட்டி, நுழைவு தர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும் கழக சார்பில்-தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜுலை17 Ñ.பி. மாநிலத்தைச் சார்ந்த நிர்வாண சாமியார் பாத யாத்திரையாக-புதுவைக்குள் நுழைந்த போது, அவரைக் கைது செய்யக் கோரி புதுவை கழக சார்பில் மறியல் போராட்டம் நடத்திய கழகத் தோழர்கள் கைதானார்கள்.கரூ£¤ல் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கூடி, கழகத்துக்கான செயல் திட்டங்களை உருவாக்கியது.
ஜுலை18 கோபியிலிருந்து பாரியூர் செல்லும் நெடுஞ்சாலைத் துறையில் கட்டப்ட்ட கோயிலை எதிர்த்து, கோபி கழகத்தினர் மேற்கொண்ட முயற்சியால், காவல்துறை தலையிட்டு, கோயிலை இடித்தது.
ஜுலை 19 யூர்மபுரி மாவ்டடம் தீர்த்த மலை அருகே சிகரெட் சாமியார் ஒருவர் நடத்திய மோசடிக்கு எதிராக தர்மபுரி மாவட்டக் கழகத் தோழர்கள், பிரச்சார இயக்கங்களை நடத்தினர்.


ஆக.15 மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு-கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தலித் மக்கள் உரிமை மீட்புப் பயணம் புறப்பட்ட போது, கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆக.17 தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை-தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தைக் கழகம் நடத்தியது தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆக.30 கோவை வருவாய்த்துறை அலுவலக வளாகத்துக்கள் கோயில் கட்டும் முயற்சிகள் நடப்பதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில், கழகசார்பில் கோவை இராமகிருட்டிணன் வழக்குத் தொடர்ந்தார். கோயில் கட்ட நீதிமன்றம், இடைக்கால தடைவிதித்தது. வழக்கறிஞர் துரைசாமி ஆஜரானார்.


செப்.6 ரசாயனத்தால் செய்யப்பட்ட விநாயகன் சிலைகளை தமிழகம் முழுவதும் எந்த இடத்திலும் கரைக்கக் கூடாது என்ற கழக சார்பில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர் துரைசாமி ஆஜரானார்.
செப்.9 மேட்டூர் ரசயான ஆலைகளின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரியும், கடலூரில் பி.வி.சி ரசாயன ஆலை அமைக்க அரசு தந்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும், மேட்டூரிலிருந்து கடலூர் வரை தந்தை பெரியார் திராவிடர் கழகமும் மற்றும் கோனூர் மேற்கு விவசாயிகள் சங்கமும், சுற்றுச் சூழல் அமைப்புகளோடு இணை¢நது மேட்டூரிலிருந்து-கடலூர் வரை பிரச்சார நடைப்பயணத்தைத் துவங்கினர்.


அக்.1,2 திருப்பூரில் கழக சார்பில் ‘தமிழர் எழுச்சி விழா’ நடைபெற்றது. பெரியாரின் பேச்சும், எழுத்துகளம் அடங்கிய ‘குடிஅரசு’-2ஆம் தொகுதி வெளியிடப்பட்டது. குத்தூசி குருசாமி, புலவர் குழந்தை நறறாண்டு விழாக்களோடு மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியும் நடந்தது. கழக சார்பில் முதல் முறையாக இரண்டு நாள் நடந்த மாநாடு இது.

அக்.20-24 திண்டுக்கல் அருகே உள்ள நொச்சை ஒடைப்பட்டியில் கழகத் தோழர்களுக்கு 5 நாள் சமூக அரசிய்ல பயிலரங்கம் நடந்தது. 60 தோழர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டக் கழகம், இதை ஏற்படு செய்திருந்தது.
அக்.25 2003 ஜுலையில் புதுவையில் நடந்த கழக மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி-புதுவை இந்து முன்னணி தலைவர் செல்வம் என்பவ்ர் வெளியிட்டிருந்து அறிக்கையில்-கழகத் தலைவர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார். இதை எதிர்த்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செல்வம் என்பவர் மீது, மேட்டூர் நீதிமன்றத்தில் கிரிமினல்வழக்கு தொடாந்தார் . இந்த நிலையில்-தாம் உண்மைக்கு மாறாக வெளியிட்ட அவதூறுகளுக்காக இந்து முன்னணி தலைவர் செல்வம், மன்னிப்பு கேட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டில் விளம்பரமாக வெளியிட்டார்.


நவ.28 இரயில்வே துறைகளில்-மனித மலத்தை, மனிதர்களே எடுக்கும் இழிவை நிறுத்தக் கோரி, தமிழகம் முழுதும் 22 இரயில் நிலையத்தில் ஆதித் தமிழர் பேரவை நடத்திய ரயில் மறிய்ல கிளர்ச்சியில்-தமிழகம் முழுதும் கழகத் தோழர்களும் பங்கு கொண்டனர். கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
டிச.25 சேலத்தில் ‘குடிஅரசு’ 3-ஆம் தொகுதி வெளியிடப்பட்டது. சேலம் கழகத் தோழர்கள் பெரியார் நூலகம், பெரியார் உடற்பயிற்சி மய்யத்தைத் துவக்கினர்.

No comments: