மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங் களில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கொளத்தூர், கோவை, சென்னை, தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் நான்கு மூலைகளிலி ருந்தும் சம்பூகன் சமூக நீதிப் பயணம் இரண்டாம் கட்டப் பிரச்சாரப் பயணம் தொடங்கி 12.11.2006 அன்று திருச்சியில் நிறைவடைந்தது. கோவையிலிருந்து
பொதுச்செயலாளர்கோவை.இராமகிருட்டினன் தலைமையிலும், சென்னையிலிருந்து பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும், கொளத்தூரிலிருந்து கழகத் துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலும், தூத்துக்குடியிலிருந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் ஆன குழுக்கள் தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் செய்தன. 12.11.2006 அன்ற திருச்சியில் சம்பூகன் சமூக நீதிப் பயண நிறைவு விழாவில் சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர். இரவீந்திரநாத், டாக்டர். முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
No comments:
Post a Comment