மத்தியஅரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போன்றவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வீரப்பமொய்லி குழு தனது பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக இடஒதுக்கீட்டை முடக்கும் நோக்கில் தனது பரிந்துரையை அளித்தது. எனவே வீரப்பமொய்லி குழுவின் அறிக்கையை எரிக்கும் போராட்டத்தை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும் அறிவித்தன. 22.11.2006 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீரப்பமொய்லி பரிந்துரை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
Wednesday, 27 June 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment