Wednesday, 27 June, 2007

பல்லடம் நாத்திகர் விழா


கோவை மாவட்டம் பல்லடத்தில் 15.04.2007 அன்று நாத்திகர்விழா எழுச்யுடன் நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் பி.எம்.ஆர் திருமண மண்டபத்ல் தோழர் ப.மூர்த்தி நினைவு அரங்கில் பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சி.விஜயன் வரவேற்புரை நிகழ்த்தபல்லடம் திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப்பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.
முதல் நிகழ்வாக தஞ்சை குப்பு வீரமணி அவர்கள் தலைமையில் கா.சு.நாகராசு, சிற்பி செல்வராசு, பன்னீர்செல்வம், பெங்களூர் கலைச்செல்வி, பேராசிரியர் ருக்மணி, மதிமாறன், சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து புலவர் செந்தலை கவுதமன் நடுவராகவும் கடலூர் வழக்கறிஞர் அழகரசன், மயிலாடுதுறை அழகிரி ஆகியோர் வழக்காடுபவர்களாகவும் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது.
மாலை 5.00 மணியளவில் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கி காமராசர் திடலில் முடிவடைந்தது.
மாலை 7.00 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கழக தலைமைக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் தலைமை வகித்தார். பல்லடம் திருமூர்த்தி வரnற்புரை ஆற்றினார். விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் வந்தியத் தேவன், ஆதித்தமிழர்பேரவை பொதுச்செயலாளர் நீலவேந்தன், வழக்கறிஞர் செ. துரைசாமி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டினன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர். சூலூர் பன்னீர்செல்வம் நன்றியரையாற்றினார்.
விழாவிற்கு உழைத்த தோழர்கள்:
க.ஆறுமுகம், ந.ரமேசு, சிவக்குமார், இரா,அண்ணாத்துரை, ம.கருப்புச்சாமி, சி.முருகேசு, மு.வடிவேல்,சு.வடிவேல்,ந.சின்னச்சாமி, ம. இரவி, இராஜ்கபூர், திருமூர்த்தி, குளத்துப்பாளையம் குமார், குணசேகர், பொங்கலூர் கார்த்தி, சிவராசு, செகதீசன், இராமசாமி,கிருட்டினமூர்த்தி, இஸ்மத்,குட்டி. பழனிச்சாமி,ஆ.பொன்னுச்சாமி


தேசியப் பாதுகாப்புச் சட்டம் - கண்டனப் பேரணி


இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத் கும்பலால் சிறீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்வினையாகக் கிளர்ந்தெழுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச்சட்டத்தை ஏவியது. 40 தோழர்கள் 15 நாள் காவலில் இருந்து பிணையில் வந்தனர். பெரம்பலூர் இலட்சுமணன், தாமோதரன், கோபி இராம.இளங்கோவன்,அர்ச்சுனன்,முருகானந்தம், ஈரோடு குமரகுரு சென்னை குமரன் ஆகிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு ஐந்து மாதங்களாகச் சிறையில் உள்ளனர். பெரியாரியல் கடமையாற்றிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைக்கண்டித்து 16.03.2007 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.

வீரப்பமொய்லி அறிக்கை எரிப்புப் போராட்டம்


மத்தியஅரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போன்றவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வீரப்பமொய்லி குழு தனது பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக இடஒதுக்கீட்டை முடக்கும் நோக்கில் தனது பரிந்துரையை அளித்தது. எனவே வீரப்பமொய்லி குழுவின் அறிக்கையை எரிக்கும் போராட்டத்தை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும் அறிவித்தன. 22.11.2006 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீரப்பமொய்லி பரிந்துரை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

அப்சலுக்கு தூக்குதண்டனை - கண்டன ஆர்ப்பாட்டம்

அப்சலுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் 06.11.2006 அன்று தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார்திராவிடர்கழகம் மற்றும் THE FEDERATION FOR THE RETRIEVAL OF CIVIL RIGHTS பேராசிரியர் அ.மார்க்ஸ், அற்புதம் அம்மாள் மற்றும் ஏராளமான தலித் இயக்கத்தொண்டர்களும் பங்கேற்றனர்.

சம்பூகன் சமூகநீதிப்பயணம் இரண்டாம்கட்டப் பிரச்சாரம்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங் களில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கொளத்தூர், கோவை, சென்னை, தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் நான்கு மூலைகளிலி ருந்தும் சம்பூகன் சமூக நீதிப் பயணம் இரண்டாம் கட்டப் பிரச்சாரப் பயணம் தொடங்கி 12.11.2006 அன்று திருச்சியில் நிறைவடைந்தது. கோவையிலிருந்து

பொதுச்செயலாளர்கோவை.இராமகிருட்டினன் தலைமையிலும், சென்னையிலிருந்து பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையிலும், கொளத்தூரிலிருந்து கழகத் துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலும், தூத்துக்குடியிலிருந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் ஆன குழுக்கள் தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் செய்தன. 12.11.2006 அன்ற திருச்சியில் சம்பூகன் சமூக நீதிப் பயண நிறைவு விழாவில் சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர். இரவீந்திரநாத், டாக்டர். முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் படத்திறப்பு - இரங்கல் கூட்டப் படங்கள்

இடம் : கோவை பெரியார் படிப்பகம்
நாள் : 15.12.2006

தொடக்கஉரை : கோவை இராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

படத்திறப்பு : கொளத்தூர் மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

இரங்கல் உரை :
கோவை ஞானி
எம்.வீரகோபால் தி.மு.க மாநகரச் செயலாளர்
கோவைமு.கிருஸ்ணசாமி, ம.தி.மு.க
இராமகிருட்டிணன் ம.தி.மு.க அவைத்தலைவர்
எழுத்தாளர் பாமரன்,
விடியல் சிவா,
ஓசை காளிதாசு,
நீலவேந்தன், பொதுச்செயலாளர் , ஆதித் தமிழர் பேரவை
ஆ,காந்தி, உலகத்தமிழர் பேரமைப்பு
தனசேகரன் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி
வான்மதி வேலுச்சாமி பல்லடம்
தேவேந்திரன் தமிழ் தமிழர் இயக்கம்
சாக்ரடீசு, பா.ம.க

கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல் படங்கள்


கோவையில் சிங்கள இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தினரால் விமானப்பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல் 85 தோழர்கள் கைதுகோவையில் சிங்கள இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தினரால் விமானப்பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல்போராட்டம் நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்களது தலைமையில் 17.11.2006 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோவை சூலுர் சீரணி அரங்கிலிருந்து சிங்களவெறியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சூலூர் விமானப்படைத்தளம் நோக்கி மறியல் செய்யப் பேரணியாகத் தோழர்கள் புறப்பட்டனர். மறியலுக்குச் சென்ற 85 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, 26 June, 2007

எஸ்.வி.இராஜதுரை அவர்களின் ஆகஸ்ட் 15 நூல் வெளியீட்டு விழா படங்கள்

18.02.07 இல் ஈரோட்டில் நடைபெற்ற எஸ்.வி.இராஜதுரை அவர்களின் ஆகஸ்ட் 15 நூல் வெளியீட்டு விழா படங்கள்


நூல் வெளியிட்டவர் : தோழர் கொளத்தூர் மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நிறைவுரை : எஸ்.வி.இராஜதுரை
இயக்குநர், பெரியார் உயராய்வு மையம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
19.03.07 ஈரோட்டில் நடைபெற்ற என்.எஸ்.ஏ. கண்டனக் கூட்டம் புகைப்படங்கள்


19.03.07 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழகக் கொடி அறிமுக விழா மற்றும் என்.எஸ்.ஏ. கண்டனக் கூட்டம் புகைப்படங்கள்


2..என்.எஸ்.ஏ கண்டனக்கூட்ட சுவரெழுத்துக்கள்
கொடியேற்று விழா
மேட்டூர் டி.கே.ஆர் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி
வழக்கறிஞர் பாலமுருகன்
வழக்கறிஞர் ப.பா.மோகன்
பேராசிரியர் கல்விமணி
மக்கள் கண்காணிப்பகம். ஹென்றிடிபேன்
ஆனூர் ஜெகதீசன்
விடுதலை இராசேந்திரன்
கோவை இராமகிருட்டிணன்
கொளத்தூர் மணி